நோன்பு வைத்துக்கொண்டு இதை செய்யாதீர்
| nonbu hadees | tamil hadees whatsapp status | nonbu bayan
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 3006.
நோன்பு வைத்துக்கொண்டு இதை செய்யாதீர்
| nonbu hadees | tamil hadees whatsapp status | nonbu bayan
எவர் அல்லாஹுதஆலாவுடைய பொருத்தத்தை நாடி பணிவை மேற்கொள்வாரோ, அவரை அல்லாஹுதஆலா உயர்த்தி விடுவான். அதன் காரணமாக அவர் தன்னைத் தாழ்வாகக் கருதுவார், மக்களின் பார்வையில் உயர்ந்து விடுவார். மேலும் எவர் பெருமையடிக்கிறாரோ, அவரை அல்லாஹுதஆலா தாழ்த்திவிடுகிறான். அதனால் அவர் தன்னை உயர்வாக கருதுவார் மக்கள் பார்வையில் தாழ்ந்துவிடுகிறார். பிறருடைய பார்வையில் அவர் நாய், பன்றியைவிடவும் இழிவடைந்து விடுகிறார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)
Comments
Post a Comment